சுப்ரமணியபுரம்- பட நடிகை சுவாதி விவாகரத்து செய்கிறாரா? தீயாய் பரவும் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,July 19 2023]

சசிக்குமார் இயக்கத்தில் நடிகர் ஜெய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமான ‘சுப்ரமணியபுரம்‘ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை சுவாதி ரெட்டி தனது கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் எனும் தகவல் பரவலாகி வருகிறது. ஆனால் இதுகுறித்து நடிகை எந்த அறிக்கையும் வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் பிறந்து மும்பையில் வளர்ந்தவரான சுவாதி ரெட்டி கடந்த 2008 இல் தெலுங்கு சினிமா ஒன்றில் அறிமுகமானார். தொடர்ந்து 2008 இல் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ‘வடகறி’ போன்ற ஒருசில தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் தெலுங்கு, மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகையாகவே வலம்வந்தார்.

இந்நிலையில் கடந்த 2018 இல் கேரளாவைச் சேர்ந்த பைலட் விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஹைதராபாத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்ற இந்தத் திருமணத்திற்கு ஒருசில சினிமா பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து தனது கணவர் இந்தோனேஷியாவில் வேலை பார்த்து வந்ததால் அவருடனேயே வெளிநாட்டில் வசித்துவந்தார்.

இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நடிகை சுவாதி கடந்த 2019 இல் ‘திருசூர்புரம்‘ எனும் மலையாள சினிமாவில் நடித்திருந்தார். பின்னர் 2020 வாக்கில் தன்னுடைய திருமண புகைப்படங்கள், கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இருந்து நீக்கினார். இதனால் அவர் விவகாரத்து செய்யப்போகிறாரா? என்று கேள்வி எழும்பியது.

இதற்கு பதிலளித்த நடிகை சுவாதி சினிமாவையும் சொந்த வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். அதனால்தான் இப்படி செய்தேன் என்ற விளக்கம் அளித்து விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதைத்தொடர்ந்து சிறிது காலம் சோஷியல் மீடியாவை விட்டே விலகியும் இருந்தார்.

தற்போது சமீபகாலமாக போட்டோஷுட் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவரும் நடிகை சுவாதி தன்னுடைய கணவரை விட்டு பிரியப்போகிறார் எனும் தகவல் ஊடகங்களில் தீயாய் பரவிவருகிறது. ஆனால் இதற்கு நடிகை சுவாதி ரெட்டி அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 இல் ‘பஞ்சதந்திரம்‘ எனும் ஆந்தலாஜி வகை திரைப்படத்தில் நடிகை சுவாதி நடித்திருந்த நிலையில் புதிய படங்கள் எதிலும் ஒப்புக்கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தனது கணவர் விகாஸ் வாசுவை அவர் விவாகரத்து செய்ய இருக்கிறார் எனும் தகவல் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற இந்தத் தகவல் உண்மைதானா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.