'சுப்பிரமணியபுரம்' நடிகையின் திருமண தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சசிகுமார், ஜெய் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதன் பின்னர் 'போராளி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'வடகறி', 'யட்சன்', உள்பட தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல படங்களில் சுவாதி நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை சுவாதியின் திருமண தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. வரும் 30ஆம் தேதி சுவாதியின் திருமணம் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சுவாதியும் விகாஸ் என்பவரும் காதலித்து வந்த நிலையில் இருதரப்பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறவுள்ளது. விகாஸ் மலேசியன் ஏர்லைன்ஸில் விமானியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments