போதைப்பொருள் நபருடன் தொடர்பா? விஜய், விக்ரம் பட நடிகை சுரேகா வாணி விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதைப்பொருள் தொடர்பான விவகாரம் தற்போது தலைதூக்கியிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகை சுரேகா வாணிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது போன்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில் அதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை சுரேகா வாணி. தமிழில் இவர் ‘உத்தமபுத்திரன்‘ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பின்னர் ‘தெய்வத்திருமகள்’ திரைப்படத்தில் வரவேற்பு பெற்றார். அதேபோல ‘ஜில்லா’, ‘மெர்சல்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக இருந்துவரும் கே.பி.சவுத்ரி கடந்த சில தினங்களுக்கு முன்பு 100 போதைப்பொருள் பொட்டலங்களை வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
கோவாவில் கிளப் வைத்து நடத்திவரும் கே.பி.சவுத்ரி நைஜீரியாவைச் சேர்ந்த பெடிட் எபுசர் என்பவரிடம் இருந்து 100 போதைப் பொருள் பொட்டலங்களை வாங்கியதாகவும் அதில் 10 பொட்டலங்களை பயன்படுத்திவிட்டு மற்றவற்றை விற்க முயற்சித்தாகவும் சைபராபாத் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2.05 லட்சம் ரொக்கம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் கே.பி.சவுத்ரியிடம் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பலரும் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் நடிகை சுரேகா வாணி, ஜோதி, நடிகை அஷு ரெட்டி போன்றோர் மீதும் தறபோது சந்தேகம் வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என்பதுபோன்ற தகவலும் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நடிகை அஜு ரெட்டியிடம் 100 முறைக்கும் மேலாக கே.பி.சவுத்ரி பேசியிருப்பது குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியது. இதற்கு அவர் விளக்கம் அளித்துவிட்ட நிலையில் தற்போது நடிகை சுரேகா வாணி விருந்து ஒன்றில் தயாரிப்பாளர் கே.பி.சுவுத்ரியுடன் இருப்பதுபோன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
இதுதொடர்பாக நடிகை சுரேகா வாணி, சவுத்ரியை தயாரிப்பாளர் என்ற முறையில் தெரியும். மற்றபடி போதை வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேவையில்லாமல் இந்த பிரச்சனையில் என்னையும் என் மகளையும் இழுக்க வேண்டாம் என்று விளக்கம் அளித்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ஏற்கனவே கன்னட சினிமாவில் போதைப்பொருள் விவகாரம் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில் தற்போது தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி 90 பொட்டலங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதில் சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் சுரேகா வாணி தனக்கும் போதைப்பொருள் பிரச்சனைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் அளித்திருக்கும் வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com