திடீரென மொட்டை அடித்த அஜித், விஜய் பட நடிகை.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் ,விஜய் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த நடிகை திடீரென மொட்டை அடித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் நடித்த ’விஸ்வாசம்’ திரைப்படத்தில் வில்லன் ஜெகபதி பாபுவின் மனைவியாக நடித்தவரும் , விஜய் நடித்த ’மெர்சல்’ திரைப்படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடித்தவருமான சுரேகா வாணி, தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் உட்பட பல திரைப்படங்கள் நடித்திருந்தார். தமிழை விட தெலுங்கில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை சுரேகா வாணி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் தனது மகளுடன் சேர்ந்து எடுத்த பல ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென மொட்டை அடித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ம் மொட்டை அடித்த போதிலும் சுரேகா வாணி ஸ்டைலாகத்தான் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதிகள் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு சுரேகா வாணி தனது மகளுடன் திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற வீடியோவை பதிவு செய்திருந்த நிலையில் அவர் திருப்பதியில் மொட்டை அடித்திருக்க வாய்ப்பு உள்ளது.
நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு காலமானார். கணவர் மறைவுக்கு பின்னர் மகளுடன் தனியாக சுரேகா வாணி வசித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments