கருத்து வீடியோ வெளியிட்ட சன்னிலியோன்… உற்சாகத்தில் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து செட்டிலான பிரபலங்களில் ஒருவர் நடிகை சன்னிலியோன். ஆபாசப் படங்களில் நடித்து இளைஞர்களிடம் பிரபலமான இவர் தற்போது பாலிவுட், தமிழ், தெலுங்கு, மலையாள மொழி சினிமாக்களில் பிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் சன்னிலியோன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2 வருடங்களாக கொரோனா எனும் கோர அரக்கனின் கையில் சிக்கி மக்கள் அனைவரும் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டிருப்பதை குறிக்கும் வகையில் நடிகை சன்னிலியோன் தற்போது (சிறைபோல) கம்பிகளுக்கு பின்னால் ஒளிந்து நடித்து காட்டியிருக்கிறார்.
மேலும் இதற்கு ஒரே தீர்வு கொரோனா தடுப்பூசிதான். அதைப் போட்டுக்கொண்டால் வேறென்ன? கொண்டாட்டம்தான்… எனக் கூறும் நடிகை சன்னியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகிறது.
தமிழில் இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில் “வீரமாதேவி“ எனும் படத்தில் நடிப்பதற்காக நடிகை சன்னிலியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதைத்தவிர இயக்குநர் யுவன் இயக்கத்தில் “ஓ மை கோஸ்ட்“ திரைப்படத்திலும் சசிகுமார் இயக்கத்தில் மற்றொரு திரைப்படத்திலும் துணைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் “‘Shero“ எனும் திரைப்படத்தில் நடிகை சன்னிலியோன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சன்னிலியோனின் தடுப்பூசி குறித்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உடனே மருத்துவமனைக்கு செல்கிறோம் என்று கமெண்ட் பதிவிட்டு அதை வைரலாக்கி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments