பிகினி உடையுடன் கையில் சரக்கு? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை சன்னிலியோன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆபாசப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் சினிமா தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இளைஞர்கள் மனதில் எப்போதும் கவர்ச்சி கன்னியாக உலா வரும் நடிகை சன்னிலியோன் நீண்டநாட்களாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடாமல் இருந்துவந்தார்.
தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரையில் இருந்தவாறு பிகினி உடையோடு கையில் சரக்குப் பாட்டிலை திறக்கும் வீடியோ காட்சியை பதிவிட்டு உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். நடிகை சன்னிலியோன் கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நடிக்கத் துவங்கினார். இந்தியைத் தவிர தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி போன்ற பல மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் “வடகறி“ படத்தின் ஒருபாடலுக்கு நடனம் ஆடியிருந்த நடிகை சன்னிலியோன் தற்போது இயக்குநர் வடிவுடையான் இயக்கிவரும் “வீரமாதேவி” எனும் படத்தில் நடிகை சன்னிலியோன் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி போன்ற மொழிகளில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமாவைத் தவிர விளப்பரப் படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் படு பிசியாக இருந்துவரும் நடிகை சன்னிலியோன் வெளியிட்ட பிகினி உடை வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments