முதல்வர் மகனை எதிர்த்து போட்டியிட்ட ரஜினி பட நடிகை வெற்றி!


Send us your feedback to audioarticles@vaarta.com


கர்நாடக மாநிலத்தில் அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றார்.
ரஜினிகாந்த் நடித்த 'முரட்டுக்காளை', 'கழுகு' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சுமலதா, மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவி ஆவார். இவர் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநில மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
இன்று வாக்கு எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் இருந்தே முன்னணியில் இருந்து வந்த நடிகை சுமலதா, சற்றுமுன் வெளியான தகவலின்படி 610 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுமலதா 1,22,924 வாக்குகளும், நிகில் குமாரசாமி 1,22,344 வாக்குகளும் பெற்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments