கமல் சார்கிட்ட ஆட தெரியாதுன்னு பொய் சொல்லி அடி வாங்குனேன் - சுலக்ச்சனா
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுலக்ச்சனா. இவர் தான் தன்னுடைய இரண்டரை வயதில் இருந்து நடித்து வருகிறார். இதுவரை மொத்தம் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சுலக்ச்சனா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சினிமாவில் தான் கடந்து வந்த பாதைகளை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். நடிகை சுலக்ச்சனாவிடம் நீங்க தூங்காதே தம்பி தூங்காதே படத்துல கமல் சார் கூட நடிச்சுருப்பீங்க அந்த அனுபவத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்க ? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் "கமல் சார் பார்த்தா எனக்கு பயம். கமல் சார் ரொம்ப பிரமாதமா நடனம் ஆடுவாரு ,நடிப்பாரு அவரு முன்னாடி நாம்ம ஒண்ணுமே பண்ண முடியாது அந்த பயத்தோடையே அவரு கூட நடிச்சேன். அவரு நடிக்கிறத நான் கவனமா பார்த்து நி றைய விசியங்களை தெரிந்து கொள்வேன் ஒரு முறை நான் நடனம் நன்றாக ஆடுவதாக கூறி என்னை பாராட்டினார்" என்று பதில் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments