மாதம்பட்டி ரங்கராஜ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை சுஜித்ரா
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்றைய காலகட்டத்தில் நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான துறைகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்கவே விரும்புகிறோம்.ஆனால் அதுவும் அவ்வளவு எளிதல்ல.அப்படி இருக்கையில் சமையல் கலை என்பது உண்மையில் தனித்துவமான கலை.அதை எல்லோராலும் பூர்த்தி செய்ய இயலாது.
ஒரு சின்ன பக்குவ மாற்றம் ஆனால் கூட அதாவது உப்போ காரமோ கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ இருந்தாலும் அதை வாயில் வைக்க இயலாது.இப்போது உள்ள தலைமுறைகள் என்னதான் வேகமாக சென்றாலும் உணவு விஷயத்தில் கெட்டி.நல்ல உணவிற்காக நாலு மைல் தள்ளி கூட போய் சாப்பிடுவார்கள்.சமூக வலைத்தளங்களில் பதிவிடும் உணவு வ்லோக் எல்லாமே தேடி ஆராய்ந்து நேரிலே சென்று சாப்பிடுபவர்களும் உண்டு.இப்படி உணவுக்காக தனி முன்னுரிமை கொடுப்பவர்களும் உண்டு.
அதெல்லாம் சரி சாப்பிடுவதற்காக நல்ல இடத்தை தேடி செல்வது ஒரு ரகம்.அந்த சமையலையே தனது வேலையாக துறையாக கையில் எடுத்து இன்று அதிலே வெற்றிகரமாக நடைபோட்டு கொண்டு இருக்கும் நமது மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் சமீபத்தில் இந்தியா க்ளிட்ஸ் யூடுயுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ,
மிகவும் கலகலப்பாக நடந்த இந்த நேர்காணலில் செஃப் ரங்கராஜ் அவர்களுக்கென சில கேம்ஸ் வைக்கப்பட்டன.சமையல் மட்டுமில்லாமல் புத்தியை தீட்டுவதிலும் வல்லவராக இருந்தார்.
மேலும் நேர்காணலின் நடுவே பாக்கியலட்சுமி சீரியல் சுஜித்ராவின் வீடியோ பதிவு போடப்பட்டது.அதில் குக் வித் கோமாளியில் பங்கேற்கும் எனக்காகவும் மற்றவர்களுக்காகவும் எப்போது உங்கள் கையால் சமைத்து தர போகிறீர்கள் என கேட்டனர் .
ரங்கராஜ் அவர்கள்,சுஜித்ரா அவர்கள் எங்களோட நம்பிக்கையின் நட்சத்திரம் அதற்கும் மேல் அவர்கள் சமைப்பது எல்லாமே ஒரு வித்தியாசத்தை கொடுக்கும்.அவங்க அவங்களோட பெஸ்ட்ட நல்லாவே கொடுக்குறாங்க.கூடிய சீக்கிரமே லைவ்வா ஒரு கிராண்ட் டின்னர் பண்ணி கொடுக்குறேன்.இன்னும் இவர் பேசிய பல ஸ்வாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments