முதல்முறையாக டியூன் போட்டு பாட்டு எழுதிய முன்னாள் தமிழ் ஹீரோயின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரதிராஜாவின் ’புதுநெல்லு புதுநாத்து’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்பட பல முன்னணி நாயகர்களின் படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை சுகன்யா. அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகை சுகன்யா முதன்முதலாக ஒரு பாடலை கம்போஸ் செய்து அந்த பாடலையும் எழுதியுள்ளார் .இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து நடிகை சுகன்யா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’ஒற்றுமை ஓங்க வேண்டும் வேற்றுமை நீங்க வேண்டும் என்ற இந்த பாடலை முதன் முதலாக நான் எழுதி கம்போஸ் செய்துள்ளேன். பாரத் மாதா கி ஜே. அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
இந்திய நாட்டின் கொடியை வணங்கு
பாரத நாட்டின் மண்ணை வணங்கு
தாய்த்திருநாட்டின் தன்மை உணர்ந்து
செவியில் மொழிகள் தேனாய் பாய்ந்து
தாயே தாயே பாரத தாயே
ஆனந்த மழையாய் பொழியட்டுமே
ஆறாய் எங்கும் ஓடட்டுமே
என்று தொடங்கும் இந்த பாடலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
‘ஒற்றுமை ஒங்க வேண்டும் வேற்றுமை நீங்க வேண்டும்’
— sukanya (@SukanyaActor) August 15, 2020
This verse is from my first song that I penned & tuned.
Listen to it here -> https://t.co/IUp76Rl5BJ
Bhārath Māthā ki jai!
Happy Independence Day ???? pic.twitter.com/R7rcc60P7V
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments