ரூ.10 கோடி இழப்பீடு: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை வழக்கு!

  • IndiaGlitz, [Thursday,July 22 2021]

முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது தமிழ் நடிகை ஒருவர் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் நடிகை ஒருவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்தார் என்பது தெரிந்ததே. இந்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் அதன் பின் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதன்படி அதே நடிகை தற்போது ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு பெறுவதற்கான உரிமை உண்டு என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கை நடிகை தொடுத்து உள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கின் முடிவு என்னவாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சூர்யா 40 படத்தின் அட்டகாசமான டைட்டில் மற்றும் மினி டீசர்!

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் இது சூர்யாவின் 40வது படம்

3 நடிகைகளை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்தாரா ராஜ்குந்த்ரா?

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பிரியாமணி கிரிமினல்...அந்த கல்யாணம் செல்லாது....! கணவரின் முதல் மனைவி குற்றச்சாட்டு.....!

முஸ்தபா ராஜ், நடிகை பிரியாமணியின் கல்யாணம் செல்லாது, அது சட்டவிரோதமானது என அவரின் முதல் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

கனமழையால் கதிகலங்கும் சீனா… அணை உடையும் அபாயம் இருப்பதாக பகீர் தகவல்!

சீனாவின் ஹெனான் மகாணத்தில் கடந்த ஒருசில தினங்களாக கனமழை பெய்துவருகிறது.

சந்தைக்கு வரும் பறக்கும் கார்கள்… இந்திய மதிப்பில் விலை தெரியுமா?

எரிபொருள் வாகனங்களைப் பொறுத்த வரையில் தற்போது ஆட்டோமேட்டிக் கார்கள் சந்தைக்கு வந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கின்றன.