தமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்
- IndiaGlitz, [Sunday,May 16 2021]
தமிழ் நடிகையின் தந்தையும் பழம்பெரும் பாலிவுட் நடிகருமான சந்திரன் என்பவர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
கடந்த 1984ஆம் ஆண்டு வெளியான ’மயூரி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுதா கே.சந்திரன். இவர் தமிழில் ’சர்வம் சக்திமயம்’ ’தர்மம்’ ’நம்பினார் கெடுவதில்லை’ ’வசந்தராகம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விக்ரம் நடித்த ’சாமி 2’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சுதா கே.சந்திரனின் தந்தையும் பல பாலிவுட் படங்களில் நடித்தவருமான கே.டி.சந்திரன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86. நடிகர் சந்திரன் மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் கோளாறு காரணமாக மே 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணிக்கு காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் நடிகை சுதா சந்திரன் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.