அந்தக் கன்னக்குழி அழகில்… இளம் நடிகை பதிவிட்ட வைரல் போட்டோ ஷுட் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் வலம் வரும் இளம் நடிகை சிருஷ்டி டாங்கே. இவருடைய கன்னக்குழி அழகிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “யுத்தம் செய்” திரைப்படத்தில் அறிமுகமான இவர் அடுத்து “மேகா”, “எனக்குள் ஒருவன்“, “டார்லிங்“, “கத்துக்குட்டி“ எனப் பல படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது தமிழில் பெரிய அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாத இவர் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். அதோடு சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “சக்ரா“ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிகை சிருஷ்டி நடித்து இருந்தார். இந்நிலையில் தமிழ் சினிமா உலகில் தலைக்காட்டாத நடிகை சிருஷ்டி தற்போது சோஷியல் மீடியா மூலம் அவ்வபோது தமிழ் ரசிகர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை சிருஷ்டி டாங்கே தனது இன்ஸ்டா பதிவில் வெளியிட்டு உள்ள போட்டோ ஷுட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே தனிக்கவனம் பெற்று வருகிறது. அதிலும் I am an open book with an error 404 என்ற கேப்ஷனுடன் நடிகை சிருஷ்டி புகைப்படத்தை பதிவிட்டு இருப்பது ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது.