ரஜினிகாந்த் யோகி காலில் விழவில்லை, குனிந்து வணக்கம் தான் செலுத்தினார்.. சர்ச்சை நடிகை ட்விட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்த நிலையில் இந்த சந்திப்பின்போது அவர் யோகி காலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் 51 வயது யோகி காலில் 71 வயது ரஜினிகாந்த் விழுவதா? என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால் யோகி ஆதித்யநாத், முதலமைச்சர் மட்டுமல்ல அவர் ஒரு இந்து மத துறவி என்றும் அதன் அடிப்படையில் தான் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் நடிகை ஸ்ரீரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் ’நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலை தொட்டு வணங்கவில்லை என்றும் அவரது காலில் விழவில்லை என்றும் ஆன்மீகவாதியான ஆதித்யநாத் அவர்களுக்கு குனிந்து வணக்கம் தெரிவித்தார் என்றும் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு வழக்கம் போல் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். நடிகை ஸ்ரீ ரெட்டியின் இந்த ட்விட் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.
Rajinikanth did not touch the feet of Yogi, Rajini just bend down as a sign of respect towards a spiritual person Yogi Adityanath 🙏#Rajnikanth #JailerIndustryHit pic.twitter.com/hrEL4KMMnW
— Sri Reddy (@MsSriReddy) August 20, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments