ரஜினிகாந்த் யோகி காலில் விழவில்லை, குனிந்து வணக்கம் தான் செலுத்தினார்.. சர்ச்சை நடிகை ட்விட்..!

  • IndiaGlitz, [Sunday,August 20 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்த நிலையில் இந்த சந்திப்பின்போது அவர் யோகி காலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் 51 வயது யோகி காலில் 71 வயது ரஜினிகாந்த் விழுவதா? என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால் யோகி ஆதித்யநாத், முதலமைச்சர் மட்டுமல்ல அவர் ஒரு இந்து மத துறவி என்றும் அதன் அடிப்படையில் தான் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் நடிகை ஸ்ரீரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் ’நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலை தொட்டு வணங்கவில்லை என்றும் அவரது காலில் விழவில்லை என்றும் ஆன்மீகவாதியான ஆதித்யநாத் அவர்களுக்கு குனிந்து வணக்கம் தெரிவித்தார் என்றும் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு வழக்கம் போல் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். நடிகை ஸ்ரீ ரெட்டியின் இந்த ட்விட் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

More News

சித்தார்த் - SU அருண்குமார் இணைந்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' 'சேதுபதி' மற்றும் 'சிந்துபாத்' ஆகிய மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் SU அருண்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்த திரைப்படத்தில்

ஜெயம் ரவியின் அடுத்த பட பூஜை.. நாளை முதல் படப்பிடிப்பு.. படக்குழுவினர்களின் முழு விவரங்கள்..!

ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படமான 'JR33' திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கிறார் என்ற செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில்

அர்ஜுன் தாஸ் காட்டில் மழை.. ஹீரோவாக இன்னொரு படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கைதி' 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் சமீபத்தில் 'அநீதி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

கண்ணீர் விட்டு கதறிய வீடியோவை வெளியிட்ட 'புஷ்பா' பட நடிகை.. என்ன காரணம்?

அல்லு அர்ஜுன்  நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைதள பக்கத்தில் கண்ணீருடன் அழுத வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

முதல் படம் ரிலீஸாகும் முன்பே அதே இயக்குனருடன் இன்னொரு படம்.. தனுஷின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் முதல் முதலாக இணைந்த 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்