மே 3க்கு பிறகு கொரோனா வானத்திற்கா போய்விடும்? ஏழைகளை கவனியுங்கள்: பிரதமருக்கு ஸ்ரீரெட்டி கோரிக்கை
- IndiaGlitz, [Tuesday,April 14 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு என அறிவித்துள்ளார். இருப்பினும் அவர் மே 3-ம் தேதி வரை வேலை இன்றி வாடும் ஏழை மக்களுக்கான உதவி தொகை குறித்த எந்த அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை என்பதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நாளை இதுகுறித்து பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது சர்ச்சைக்குரிய வகையில் பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து விமர்சனம் செய்துள்ளார் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மே 3 வரை பிரதமர் மோடி நீட்டித்து உள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவர் ஏழை மக்களுக்கு எந்த விதமான உதவியையும் அறிவிக்கவில்லை.
ஒருவேளை மே 3ஆம் தேதிக்கு பிறகு கொரோனா வைரஸ் ஒரே ஒரு நபருக்கு பரவி, அது இலட்சக்கணக்கான மக்களுக்கு மீண்டும் பரவினால் என்ன செய்வது? மே 3ஆம் தேதிக்கு பிறகு கொரோனா வைரஸ் என்ன வானத்திற்கா சென்றுவிடும்? முதலில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த அளவிலாவது பணத்தை கொடுத்து அவர்களுடைய உணவுப் பொருட்கள் தேவையை பூர்த்தி செய்யுங்கள்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டி இந்த பதிவிற்கு பெரும்பாலானோர் ஆதரவும் ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.