ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நரிகளின் கதை.. ஸ்ரீரெட்டியின் அடுத்த பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஸ்ரீ ரெட்டி நேற்று விஷால் குறித்து மறைமுகமாக ஒரு பதிவு செய்த நிலையில் தற்போது நரிகளின் கதை என்ற ஒரு பதிவை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சில நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று விஷால் கூறியதை அடுத்து என்னிடம் சில செருப்புகள் உள்ளது என்று விஷாலை மறைமுகமாக தாக்கி ஸ்ரீ ரெட்டி செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஸ்ரீ ரெட்டி தற்போது இன்னொரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நரிகளின் கதை உள்ளது. சின்ன சின்ன சாதனைகளை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும் பெண்கள் துணிவோடு போராடினால், அவள் ஒரு திமிர் பிடித்தவள், நல்ல குணாதிசயமான பெண் இல்லை என்று மக்கள் சொல்வார்கள்.
நம் சுற்றுப்புறங்களில் சில நரிகள் உள்ளன. பெண்கள் அந்த நரிகளுக்கு விருந்தளித்து உணவளிக்க வேண்டும். ஒரு ஆணை விட அதிக உழைப்பை பெண்கள் செய்தாலும், ஆண்களுக்கு விருந்துகளை கொடுக்க வேண்டும். பெண்கள் கஷ்டப்பட்டு தங்கள் இலக்கை அடைவதற்கு சில ஆண்கள் முதுகு எலும்பாகவும், பல ஆண்கள் நரிகளாகவும் மாறுகிறார்கள்.
கதையின் ஒழுக்கம்: இது ஒரு பெண்ணின் தவறு, ஆண் எப்போதும் ஒரு ஆண், எப்போதும் அவன் மட்டுமே சரியானவன்.. துரதிர்ஷ்டவசமாக சில பெண்களும் இதை ஆதரித்தனர்.. என்ன பரிதாபமான உலகம்?? என நடிகை ஸ்ரீரெட்டி பதிவு செய்துள்ளார்.
Foxes story in Every girl’s life ,we want to achieve a small small achievements,wishes,goals will be there..if we fight with the dare! people will say she is an arrogant, she is not a good charecter woman..if she sacrifices her ethics for her goal if she sleeps with the…
— Sri Reddy (@SriReddyTalks) August 30, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments