பிக்பாஸ் வீட்டில் நடந்த ரெட்கார்ட் டிராமா.. நடிகை ஸ்ரீப்ரியா கண்டனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளரை அவமரியாதையாக பேசிய அசீமை ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என ஒட்டு மொத்த பார்வையாளர்கள் வலியுறுத்திய நிலையில் கமல்ஹாசன் முன்னிலையில் நேற்று ரெட்கார்ட் டிராமா மட்டும் நடந்து நடந்தேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் போட்டியாளர் ஆயிஷாவை போடி வாடி என தரக்குறைவாக பேசிய அசீம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை அடுத்து கமல் நேரடியாக அசீமுக்கு ரெட்கார்ட் கொடுத்து அவரை வெளியே அனுப்பாமல் சக போட்டியாளர்களை ரெட் கார்டு கொடுக்க வைத்தார்.
தனலட்சுமி தவிர கிட்டத்தட்ட அனைவருமே அசீமுக்கு ரெட்கார்டு கொடுத்த நிலையில் அதன் பிறகாவது அசீமை வெளியே கமல் அனுப்புவார் என்று பார்த்தால் அசீம் தனது தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும் தான் செய்தது தவறு என்று உணர்ந்து விட்டதாகவும் இனிமேல் அவ்வாறு செய்யமாட்டேன் என்று கூறியதை அடுத்து அசீமுக்கு மன்னிப்பு அளித்து அவர் தனது தவறை உணர்ந்ததற்கு கமல் வாழ்த்தும் கூறியதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்ற மன்னிப்பை சரவணனுக்கு அளித்து அவரை போட்டியில் தொடர அனுமதிக்காதது ஏன்? என்ற கேள்வி தான் தற்போது எழுந்து வருகிறது. பெண் போட்டியாளரை அவமரியாதையாக பேசிவிட்டு பின் மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? இதை உதாரணமாக வைத்து மீண்டும் இதேபோன்ற தவறு நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம் என்பதே பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு செட்டப் நிகழ்ச்சி என்று ஏற்கனவே பலர் கூறி வரும் நிலையில் இது போன்ற நிகழ்வுகள் அதை உறுதி செய்யாதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலும் அசீம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய நடிகை ஸ்ரீபிரியா ஏற்கனவே ஒரு சீசனில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக பிக்பாஸ் வெளியேற்றிய நிலையில் அதே தவறை சேர்ந்த அசீமை ஏன் வெளியே அனுப்ப கூடாது என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
Watched bb,if I remember one of the previous season some one was sent out for disrespecting a lady,I’ve been noticing most of them initiates disrespecting women and in turn they throw back!do they believe quarelling will bring them in front?Looks like vikraman is targeted?
— sripriya (@sripriya) October 22, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments