நடிகை ஸ்ரீப்ரியாவின் வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Wednesday,November 23 2022]

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகையும் இயக்குனருமான ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி அவர்கள் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. பிரபல பரத நாட்டிய கலைஞரான நடேசன் பக்கிரிசாமி அவர்களின் மனைவி கிரிஜா பக்கிரிசாமி கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.

’காதோடு தான் நான் பேசுவேன்’ என்ற படத்தை இயக்கி உள்ள கிரிஜா பக்கிரிசாமி, ஸ்ரீப்ரியா இயக்கிய ’நீயா’ ’நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மறைந்த கிரிஜா பக்கிரிசாமிக்கு ஸ்ரீபிரியா என்ற மகளும் ஸ்ரீகாந்த் என்ற மகனும் உள்ளனர். அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது.

More News

20 கோடி பட்ஜெட், 400 கோடி வசூல்.. வெற்றின்னா இப்படித்தான் இருக்கணும்!

100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு சில கோடிகள் மட்டுமே லாபங்கள் பெறும் படங்கள் இருக்கும் மத்தியில் வெறும் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்து

நான் டப்பிங் செய்யும் முதல் தமிழ்ப்படம் இதுதான்.. 'துணிவு' நடிகரின் அசத்தல் பதிவு

அஜித் நடித்த 'துணிவு' படம் தான் நான் டப்பிங் செய்ய முதல் தமிழ் படம் என பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து டப்பிங் செய்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். 

'உண்மை நடக்கும்.. பொய் பறக்கும்.. எஸ்.ஜே.சூர்யாவின் 'வதந்தி' டிரைலர்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா நடித்த முதல் நேரடி ஓடிடி திரைப்படமான 'வதந்தி' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'துணிவு' படத்திற்கு 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதா? அப்போ 'வாரிசு' நிலைமை?

தமிழகத்தில் சுமார் 1100 திரையரங்குகளில் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் 800 திரையரங்குகளில் 'துணிவு' படத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள

'கைதி 2' படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ? லோகேஷின் வேற லெவல் திட்டம்!

லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ஹீரோவுக்கு இணையாக வில்லன் கேரக்டர் இருக்கும் என்பதும் அவரது 'மாஸ்டர்' 'விக்ரம்' ஆகிய படங்களில் இருந்து தெரிய வந்தது.