போயஸ் கார்டனில் சசிகலா-ஸ்ரீதேவி சந்திப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 27 2016]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தினமும் லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி நேற்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்தார்.

ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அவருடன் நடித்துள்ளார். இருவரும் இணைந்து 'கந்தன் கருணை', 'நம் நாடு', ஆதிபராசக்தி போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே ஜெயலலிதா மறைந்த தினத்தில் ஸ்ரீதேவி தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.100க்கு பதில் ரூ.500. வள்ளலாக வாரி வழங்கிய ஏடிஎம்

நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்.கள் இயங்காமல் முடங்கி இருக்கும் நிலையில் ஐதராபாத் விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் ரூ.100க்கு பதிலாக ரூ.500ஐ வள்ளல் போல் வாரி வழங்கியதால் ஒருசில நிமிடங்களில் ரூ.8 லட்சம் பறிபோனது.

இன்று முதல் ஆஸ்கர் வின்னரின் மேற்பார்வையில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த வாரங்களில் அதிமுக, திமுக பொதுக்குழு கூட்டங்கள்

தமிழகத்தின் இருபெரும் கட்சிகளாக விளங்கி வரும் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் பொதுக்குழு கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர் சுராஜ்

'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜ், அளித்த ஒரு வீடியோ பேட்டியில் நடிகைகளின் உடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து நடிகைகள் மத்தியில் பெரும் கோப அலைகளை ஏற்படுத்தியது.

நயன்தாராவை அடுத்து சுராஜை வெளுத்து வாங்கிய தமன்னா

நடிகைகள் பணத்திற்காக எவ்வளவு கிளாமராகவும் நடிக்க தயங்குவதில்லை என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய 'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜூக்கு நடிகை நயன்தாரா கடும் கண்டனங்கள் தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நயன்தாராவை அடுத்து தற்போது இந்த படத்தின் நாயகியான தமன்னாவும் வெளுத்து வாங்கியுள்ளார்.