அஜீத்-விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் - ஸ்ரீதேவி
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்துள்ளவர் ஸ்ரீதேவி. இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் மனம் திறந்து ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
'புலி' படத்தில் நான் ராணியாக நடித்துள்ளேன். ஆனால் படத்தின் கேரக்டர் மட்டுமின்றி படக்குழுவினர்களும் என்னை ராணி போன்று மரியாதையுடன் நடத்தினர். சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் தமிழ் படத்தில் நடித்தது சந்தோஷமாக உள்ளது. இந்த படத்தில் நடித்தபோது பல வருடங்களுக்கு முன்னர் பழைய ஸ்டுடியோக்களில் நடித்த இனிமையான நினைவுகள் என் கண்முன்னே வந்தது.
'புலி'யில் நான் நடித்த கேரக்டர் குறித்து கூறவேண்டும் என்றால் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வரும். அந்த வகையில் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நான் நடித்த மிகவும் வித்தியாசமான கேரக்டர் இதுதான். இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் மன்னர் கால படங்களில் வரும் சாதாரணமாக ராணி கேரக்டர் இல்லை என்பது படம் பார்க்கும்போது தெரியும்.
அஜீத்-விஜய் போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது. 'இங்கிலீஷ்-விங்கிலீஷ் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அஜீத், மற்றும் 'புலி'யில் விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் ஆகியவை எனக்கு புதியதாக இருந்தது. அஜீத் படப்பிடிப்பில் கலகலப்பாக நகைச்சுவையுடன் இருப்பார். ஆனால் விஜய் படப்பிடிப்பில் அமைதியாக இருப்பார். யாருடனும் டிஷ்கஷன் மற்றும் விவாதம் செய்ய மாட்டார். ஆனால் உடன் நடிக்கும் நடிகர்களை உற்சாகப்படுத்துவார்' இவ்வாறு ஸ்ரீதேவி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com