வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையிடம் 1000 ரூபாய் கடன் கேட்ட ரசிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு ரசிகர் ஒருவர் அதிர்ச்சி தந்துள்ளார்.
விஷால், சமீரா ரெட்டி நடித்த ’வெடி’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவரும், இந்தியில் ஷாதி நம்பர்-1 உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தவரும், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான நடிகை சோபி சவுத்ரி, இந்த கொரோனா விடுமுறையில் படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் இருந்து கொண்டே தனது வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவைகளில் ஒரு சில புகைப்படங்கள் எல்லை மீறி கவர்ச்சியாக இருப்பதால் அவரது இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் பரபரப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது டிவி பார்த்துக்கொண்டே வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக 'உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவை கவனித்துக் கொள்ளும் போது நீங்கள் சிறப்பானவராக இருக்கிறீர்கள். வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் யூடியூப் பார்த்து ஒர்க் அவுட் செய்வதற்கு எனது இஏர்டெக் டிவி உதவுகிறது. ஃபிட்டாக இருக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
நடிகை ஷோபி சவுதிரியின் இந்த பதிவுக்கு பலர் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒரு குறும்புக்கார ரசிகர் ’எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்குமா? ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் திருப்பிக் கொடுத்துவிடுவேன்’ என்று கேட்டு நடிகைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். வழக்கம்போல் ரசிகரின் இந்த கோரிக்கையை ஷோபி சவுத்ரி கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிலர் ரசிகர்கள் சுவராசியமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருவதால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் பரபரப்பில் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments