கொரோனாவும், கல்யாணமும் ஒன்னுதான்? ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்துவரும் சோனாக்ஷி சின்ஹாவிடம் ரசிகர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியபோது எல்லோருக்கும்தான் கொரோனா பாதிப்பு வருகிறது, எனக்கும் அந்தப் பாதிப்பு வரவேண்டுமா? என்று பதிலளித்து, ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.
பாலிவுட்டில் தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை கத்ரினா கைஃப் நடிகர் விக்கி கௌசால் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தை ஒட்டி இளம் நடிகர், நடிகர்களிடமும் ரசிகர்கள் எப்போது உங்களது திருமணம் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் சத்ருகன் சின்ஹாவின் மகளான நடிகை சோனாக்ஷி சின்ஹாவிடமும் ரசிகர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த நடிகை சோனாக்ஷி எல்லோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது, எனக்கும் அந்தப் பாதிப்பு ஏற்பட வேண்டுமா? எனப் பதிலளித்துள்ளார். இந்தப் பதிலைப் பார்த்த ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
34 வயதான நடிகை சோனாக்ஷி பாலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகரான ஜஹீர் இக்பாலை காதலித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நடிகர் இக்பாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சோனாக்ஷி, இந்த மாதிரி அருமையான மனிதரை உலகில் எங்காவது பார்க்க முடியுமா? எனப் பதிவிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் சோனாக்ஷி- ஜஹீர் காதலை உறுதிப்படுத்தியே விட்டனர்.
இப்படியிருக்கும்போது திருமணமும், கொரோனாவும் ஒன்றுதான் என்று சோனாக்ஷி பதிலளித்து இருப்பது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments