கொரோனாவும், கல்யாணமும் ஒன்னுதான்? ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,January 25 2022]

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்துவரும் சோனாக்ஷி சின்ஹாவிடம் ரசிகர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியபோது எல்லோருக்கும்தான் கொரோனா பாதிப்பு வருகிறது, எனக்கும் அந்தப் பாதிப்பு வரவேண்டுமா? என்று பதிலளித்து, ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

பாலிவுட்டில் தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை கத்ரினா கைஃப் நடிகர் விக்கி கௌசால் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தை ஒட்டி இளம் நடிகர், நடிகர்களிடமும் ரசிகர்கள் எப்போது உங்களது திருமணம் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் சத்ருகன் சின்ஹாவின் மகளான நடிகை சோனாக்ஷி சின்ஹாவிடமும் ரசிகர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த நடிகை சோனாக்ஷி எல்லோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது, எனக்கும் அந்தப் பாதிப்பு ஏற்பட வேண்டுமா? எனப் பதிலளித்துள்ளார். இந்தப் பதிலைப் பார்த்த ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

34 வயதான நடிகை சோனாக்ஷி பாலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகரான ஜஹீர் இக்பாலை காதலித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நடிகர் இக்பாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சோனாக்ஷி, இந்த மாதிரி அருமையான மனிதரை உலகில் எங்காவது பார்க்க முடியுமா? எனப் பதிவிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் சோனாக்ஷி- ஜஹீர் காதலை உறுதிப்படுத்தியே விட்டனர்.

இப்படியிருக்கும்போது திருமணமும், கொரோனாவும் ஒன்றுதான் என்று சோனாக்ஷி பதிலளித்து இருப்பது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

திருமணத்திற்குப் பிறகு மாலத்தீவு பறந்த நடிகை கத்ரினா.. தேனிலவு கொண்டாட்டமா?

நடிகர் விக்கி கவுசால்- நடிகை  கத்ரினா கபூர் திருமணம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது நடிகை கத்ரினா

நாகினி நடிகைக்குத் திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் “நாகினி“

இதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? தாய்ப்பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு அலறவிட்ட நடிகை!

பிரபல மாடலும் பாலிவுட் நடிகையுமான ஈவ்லின் ஷர்மா தனது குழந்தைக்குப்

தனுஷின் 'வாத்தி' படத்தில் திடீரென விலகிய பிரபலம்: என்ன காரணம்?

தனுஷ் நடித்து வரும் 'வாத்தி' திரைப்படத்தில் இடம் பெற்ற பிரபலம் ஒருவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

5வது முறையாக விவாகரத்து செய்த பிக்பாஸ் நடிகை: ஒரே ஆண்டில் முறிந்த 2 திருமணங்கள்!

பிரபல நடிகை ஒருவர் நான்கு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில் கடந்த ஆண்டு ஐந்தாவதாக செய்த திருமணத்தையும் முறித்துக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.