தான் உடுத்திய ஆயிரக்கணக்கான சேலைகளை ஆன்லைனில் விற்கும் சேரன் பட நடிகை.. விலை எவ்வளவு?
- IndiaGlitz, [Saturday,March 16 2024]
சேரன் நடித்த படங்கள் உள்பட சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்த நடிகை தன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான சேலைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் மிக வேகமாக விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் தமிழில் ’அழகிய தீயே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் ’சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ ’பாசக்கிளிகள்’ ’அமிர்தம்’ ’மாயக்கண்ணாடி’ ’சில நேரங்களில்’ ’ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் அவர் ஒரு சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான சேலைகள் தன்னிடம் இருப்பதாகவும் அதை விற்பனை செய்ய உள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் பட்டு சேலைகள், கைத்தறி சேலைகள், பனாரஸ் புடவைகள் சேலைகள் உள்ளிட்ட வகைகள் தன்னிடம் சேலைகள் இருப்பதாகவும் ஒரு முறை உடுத்தியது மற்றும் உடுத்தாமலே உள்ள சேலைகளையும் விற்பனை செய்ய முடிவு எடுத்திருப்பதாகவும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் சேலைகளின் விலையையும் அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ள நிலையில் தேவையானவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரிடம் சேலை வாங்க பல பெண்கள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.