'காவாலா' பாடலுக்கு தாறுமாறான ஆட்டம் போட்ட நடிகை .. தமன்னா பார்த்தால் அவ்வளவுதான்..!

  • IndiaGlitz, [Monday,July 17 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் இந்த பாடலை பார்த்த பார்வையாளர்கள் எண்ணிக்கையும் சாதனை செய்து வருகிறது. அது மட்டும் இன்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை சோபியா அன்சாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’காவாலா’ பாடலுக்கு தாறுமாறாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியின் உச்சமாக அவரது காஸ்ட்யூம் இருக்கும் நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒருவேளை தமன்னா இந்த வீடியோவை பார்த்தால் அவ்வளவு தான் என்பது போன்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது. ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் ’காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும், இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன் தங்கமே... நயனுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்..!

நடிகர் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் நாயகியாக நடித்துள்ள நயன்தாராவின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டருக்கு 'உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன்'

திடீரென கெட்டப் மாறிய நடிகர் சூரி.. இந்த படம் தான் காரணமா?

நடிகர் சூரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்டைலிஷ் லுக்கில் தாடியுடன் இருந்த நிலையில் தற்போது தாடியை எடுத்துவிட்டு புதிய கெட்டப்புக்கு மாறி உள்ள நிலையில் அவர் 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு

தரமான சம்பவம் இருக்கு.. 'கேப்டன் மில்லர்' மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஜூலை 28ஆம் தேதி சம்பவம் இருக்கு என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் இது 'கேப்டன் மில்லர்' அப்டேட் ஆகத்தான் இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கலைநயம் எனக்கும்தான் இருக்கிறது? டால் அடிக்கும் 'தங்கலான்' நடிகையின் புகைப்படங்கள்!

தமிழ், மலையாளம், இந்தி மொழி சினிமாக்களில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன்.

கர்ப்பமான நடிகை இலியானாவின் காதலர் இவர்தானா? செம டிவிட்ஸ் வைத்த வைரல் போஸ்ட்!

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவரும் நடிகை இலியானா டி குரூஸ் கணவர் அல்லது காதலர் பெயரைக் குறிப்பிடாமலேயே கர்ப்பமாக இருக்கும் தகவலை திடீரென சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்