பதவி உயர்வு பெற்றுள்ளேன். தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சினேகாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதை அவருடைய கணவரும் பிரபல நடிகர் பிரசன்னா அறித்திருந்தார் என்பதையும் நாம் ஏற்கனவே அறிந்ததே. இந்நிலையில் பிரசவத்திற்கு பின்னர் முதல்முறையாக நடிகை சினேகா, சமூக வலைத்தளத்தில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இன்று தனது சமூக வலைத்தளத்தில் நடிகை சினேகா கூறியதாவது: நான் தாயானவுடன் பதிவு செய்யும் முதல் டூவீட் இது. எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நான் ஒரு முழுமையாக பெண்ணாக மாறியதை தற்போதுதான் உணர்ந்துள்ளேன்' என்று கூறியதோடு குழந்தையோடு மருத்துவமனை ஊழியர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் மனைவி என்ற பதவியில் இருந்து தான் அம்மா என்ற பதவிக்கு உயர்ந்துள்ளதாகவும், எனக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சுதாசிவகுமர் உள்பட மருத்துவ குழுவினர் அனைவருக்கும் எனது கோடானு கோடி நன்றிகள் என்று சினேகா கூறியுள்ளார்.
மேலும் தனது மனைவிக்கு பிரசவம் பார்க்க உதவிய மருத்துவமனை மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நடிகர் பிரசன்னா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com