பட்டு சாரி கட்டி போர் அடிச்சிருச்சா… நடிகை சினேகா ஸ்டைலை ஃபாலோ பண்ணுங்க..
Send us your feedback to audioarticles@vaarta.com
பண்டிகை நாட்கள், திருமணம் மற்றும் விஷேச தினங்களில் பெண்கள் “பட்டு“ உடுத்துவது வழக்கம். தமிழர் பாரம்பரியத்தில் “பட்டு“ சேலைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஆனாலும் பட்டு சேலைகளை அதிக நேரம் உடுத்திக்கொண்டு இருப்பதும் அதை பராமரிப்பதும் சிலருக்கு கடினமாகவே இருந்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் சிம்பிள் ஆனால் கிராண்ட் லுக் கலெக்ஷனை பலரும் விரும்புகின்றனர்.
1.திருமணத்திற்கும் சிம்பிள் சேலைகளை கிராண்ட் லுக்கில் உடுத்திக் கொண்டு உலா வரமுடியும் என்பதை நடிகை சினேகாவின் சமீபத்திய போட்டோ ஷுட் புகைப்படங்கள் காட்டியிருக்கின்றன. ரெட் கலர் போர்ட் நெக் வைத்து, ஃபுள் ஹேண்ட் ப்ளவுஸ் மற்றும் பெரிய பெரிய பூ போட்டு பார்டர் வைத்த சேலையை நடிகை சினேகா அணிந்துள்ளார்.
2. சேலைக்கு மேட்சாக கிராண்ட் லுக் நெக்லஸ் மற்றும் அதே கலெக்ஷனில் தோடும் அணிந்துள்ளார். இந்த கலெக்ஷன்கள் அனைத்தும் சேலையை கிராண்ட் லுக்கிற்கு மாற்றியிருக்கின்றன.
3. இந்தப் புகைப்படத்தில் நடிகை சினேகாவின் மேக்கப்பும் தனிக்கவனம் பெற்றிருக்கிறது. ரெட் கலர் ப்ளவுஸ்க்கு மேட்சாக அதே நிறத்தில் லிப்டிஸ்க் மற்றும் கண்ணை உறுத்தாத வகையில் அழகான மேக்கப்பையும் அவர் போட்டுள்ளார்.
4. சேலையில் மட்டுமல்ல சல்வாரிலும் கிராண்ட் லுக்கை காட்ட முடியும் என்பதை நடிகை சினேகா மற்றொரு போட்டோ ஷுட்டில் காட்டியிருக்கிறார். சிவப்பு நிறத்தில் கிராண்ட் ஜம்தாரி வொர்க், பெரிய பெரிய பூக்கள் மற்றும் மைல்ட் ஸ்டோன் பதிக்கப்பட்ட நடிகை சினேகா அணிந்திருக்கும் சல்வார் கிராண்ட் மற்றும் கலர்புல் லுக்கை கொடுக்கிறது.
5. சல்வாருக்கு ஏற்றமாதிரி அதே ஸ்டைலில் நீள வாக்கில் தொங்கும் தோடு மற்றும் மூக்கில் அணியும் நகையையும் நடிகை சினேகா அணிந்திருக்கிறார். இந்த ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. சமீபத்தில் தனது எடையை படு ஸ்லிம்மாக குறைத்துவிட்ட நடிகை சினேகாவின் இந்த லுக் உண்மையிலேயே படு வித்தியாசமாக அமைந்திருக்கிறது.
6. சேலை, சல்வாரைத் தவிர விஷேச தினங்களுக்கு லெகங்காவும் வித்தியாசமான லுக்கை கொடுக்கும். அந்த வகையில் ரெட் மற்றும் அடர்ந்த ப்ளூ நிறத்தில் நடிகை சினேகா அணிந்திருக்கும் லெகங்கா பலரையும் கவர்ந்திருக்கிறது. இந்த லெகங்காவிற்கு ஏற்றமாதிரி சிம்பிள் நெக்லஸ்ஸும் அவர் அணிந்திருக்கிறார். விஷேச தினங்களுக்கு நீங்களும் இதுபோன்ற ஸ்டைலை ட்ரை பண்ணி பண்டிகையை மகிழ்ச்சியாக மாற்றிடுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout