பட்டுப் புடவையில் ஜொலிக்கும் சிரிப்பழகி நடிகை… வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,April 23 2021]

90 கிட்ஸ்கள் மத்தியில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவரது சிரிப்பில் மயங்கிப்போன ரசிகர்கள் இவருக்கு சிரிப்பழகி, புன்னகையரசி எனப் பல பட்டப்பெயர்களை கொடுத்து இருந்தனர். மேலும் கவர்ச்சிக் காட்டாத தனது திறமையான நடிப்பில் மூலம் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருந்தார். அந்த வகையில் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.

அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிப் படங்களிலும் தனது நடிப்பு திறமையால் பேசப்படும் நடிகையாக மாறினார். இந்நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் சில முக்கியக் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் தனுஷ்ஷுடன் “புதுப்பேட்டை“ திரைப்படத்தில் தில்லான கேரக்டரில் நடித்து இருந்த நடிகை சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு பட்டாஸ் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்று இருந்தார்.

தற்போது இரண்டு குழந்தைகளுடன் தனது நேரத்தை படு ஜாலியாக செலவழித்து வரும் நடிகை சினேகா தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் பச்சைநிறப் பட்டு புடவை அணிந்து நடிகை சினேகா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்று இருக்கிறது. மேலும் தமிழ் சினிமா உலகில் நடிகை சினிமா முன்னணி இடத்தைப் பிடித்து இருந்தபோது எப்படி இருந்தாரோ அதே தோற்றத்தில் இருப்பது ரசிகர்களிடம் படு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

இணையத்தை கலக்கும் நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

கடந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியான 'ஈஸ்வரன்' மற்றும் ஓடிடியில் வெளியான 'பூமி' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை நிதிஅகர்வால் 

சிங்கமா இருந்தாலும் சிங்கத்துக்கு வயசாயிடுச்சே: தோனி குறித்து விமர்சனம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் நாளை சென்னை மற்றும் பெங்களூர் அணி மோதவுள்ளது. முதல் இரண்டு இடங்களில் மாறி மாறி சென்னை, பெங்களூரு

இன்னொரு சித்ராவாக நான் மாறிவிடக்கூடாது: சீரியல் நடிகையில் அதிர்ச்சி பேட்டி!

சின்னத்திரை நடிகை ஜெனிபர் என்பவர் தனக்கு சித்ராவின் நிலைமை வந்து விடக் கூடாது என்பதற்காக நியாயம் கேட்டு வந்திருக்கிறேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர்: இணையத்தில் வைரல்

அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

கொரோனா உயிரிழப்பால் பிணக்காடான டெல்லி… நாட்டையே உலுக்கும் புகைப்படங்கள்!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் தற்போது இந்தியா முழுக்கவே ஒருவித