மகள் பிறந்த நாளில் ரொமான்ஸ் போட்டோஷூட் எடுத்த சினேகா - பிரசன்னா தம்பதி! 

  • IndiaGlitz, [Thursday,January 27 2022]

நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா தம்பதியின் மகளான ஆத்யந்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பிறந்தநாளில் சினேகா மற்றும் பிரசன்னா எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் போட்டோ ஷூட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஆத்யந்தா என்ற மகளும் தான் விஹான் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆத்யந்தாவின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் சினேகா மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் ரொமான்ஸ் போட்டோஷூட் எடுத்துக்கொண்டனர். இதுகுறித்த வீடியோ சினேகாவின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.