இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிவிட்டது.. அஜித் படம் குறித்த நினைவுகளை பகிர்ந்த சிம்ரன்..!

  • IndiaGlitz, [Sunday,April 30 2023]


அஜித் உடன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியாகி இன்றோடு 24 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற தனது நினைவுகளை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்தப் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வெளியான திரைப்படம் ’வாலி’. எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் திரை உலக வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய இந்த படத்தில் அவர் அண்ணன் தம்பி என்ற இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பார் என்பதும் அதிலும் வில்லன் வேடத்தில் நடித்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வாலி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு சரியாக 24 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நடிகை சிம்ரன் தனது நினைவலைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். ’வாலி’ திரைப்படத்தின் 24 வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். காலத்தால் அழியாத கிளாசிக் திரைப்படம், இன்றளவும் இந்த படம் நம்மை வசீகரிக்கும். இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சிகள் என்ன? என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த காட்சிகளை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

மாலத்தீவு பீச் மணல்.. பிகினி உடை.. என்ன ஒரு டான்ஸ்.. 'கோமாளி' நடிகையின் வைரல் வீடியோ..!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தில் நடித்த நடிகை மாலத்தீவு பீச் மணலில், பிகினி உடையில், செம டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. 

முதல் படத்திலேயே விஜய்யுடன் அதிக காட்சிகள்: 'பிக்பாஸ்' போட்டியாளர் உற்சாகம்..!

விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் போட்டியாளர் ஜனனி முதல் படத்திலேயே விஜய்யுடன் அதிக காட்சியில் நடித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்கள் பிரேக் எடுக்க போகிறேன்.. சிவகார்த்திகேயன் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு சில மாதங்கள் பிரேக் கொடுக்க போகிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானால் எனது கனவு நனவாகவில்லை. பிரபல தொழிலதிபருக்கு எஸ்.எஸ்.ராஜமெளலி தந்த தகவல்..!

சிந்து சமவெளி நாகரிகம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி திரைப்படம் எடுக்க வேண்டும் என பிரபல தொழிலதிபர் வேண்டுகோள் விடுத்த நிலையில் பாகிஸ்தானால் தனது கனவு நனவாகவில்லை

'எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்': பீட்டர் பால் மரணத்திற்கு வனிதாவின் உருக்கமான பதிவு..!

 நடிகை வனிதாவை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட பீட்டர் பால் நேற்று காலமானதை அடுத்து வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.