இன்னும் இளமை தான்.. சிம்ரனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சிம்ரனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை பார்த்து அவர் இன்னும் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்
கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ’விஐபி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர் சிம்ரன். அதன் பிறகு கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விஜயகாந்த், மாதவன், உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார் என்பதும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களிலும் சில படங்கள் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 47 வயதிலும் கூட அவர் ’சப்தம்’ ’அந்தகன்’ ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ’வணங்காமுடி’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் ’சப்தம்’ என்பது அவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த பலர் இன்னும் சிம்ரன் இளமையாகத்தான் இருக்கிறார் என்று பதிவு செய்துள்ளார். மேலும் ’வயது என்பது ஜஸ்ட் ஒரு நம்பர் என்பதை அவர் நிரூபித்துள்ளார்’ ’90களின் குயின் சிம்ரன்’ என்று பலர் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout