பிரபல தொலைக்காட்சி நடிகை விவாகரத்து!

  • IndiaGlitz, [Wednesday,April 15 2020]

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Yeh Rishta Kya Kehlata Hai என்ற தொடர் மூலம் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற சிம்ரன் கன்னா கடந்த சில ஆண்டுகளாக கணவர் பரத் அவர்களிடமிருந்து பிரிந்து இருந்த நிலையில் தற்போது இருவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த தம்பதியின் மகன் வீனித், தந்தை பரத்துடன் இருப்பார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த விவாகரத்து குறித்து பேட்டி ஒன்றில் கூறிய நடிகை சிம்ரன் கன்னா, ‘ஆம் எனது கணவர் பரத்துடன் நான் விவாகரத்து பெற்று உள்ளேன். எங்கள் இருவருக்கும் பெரிதாக எந்த பகையும் இல்லை. இருப்பினும் எங்கள் இருவருக்கும் ஒரு சில விஷயங்களில் ஒத்துவரவில்லை. எனது மகன் வினீத் தற்போது பரத்துடன் தான் இருப்பார் இருப்பினும் நான் வினித்தை அவ்வப்போது பார்க்க எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம்தான் தனது மகன் வினித் கன்னா பிறந்தநாளை மிக சிறப்பாக நடிகை சிம்ரன் கன்னா கொண்டாடினார் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கசப்பு மருந்தாக இருந்தாலும் ஊரடங்கை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்: பிரபல நடிகர்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்

பால்கனி அரசாங்கம்: மோடி அரசை விமர்சனம் செய்த கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் இந்தியாவிலும் தொடங்கிய நாள் முதலே மத்திய, மாநில அரசுகளை தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் கமல்ஹாசன்

மே 3க்கு பிறகு கொரோனா வானத்திற்கா போய்விடும்? ஏழைகளை கவனியுங்கள்: பிரதமருக்கு ஸ்ரீரெட்டி கோரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

தமிழகத்தில் குறைகிறது கொரோனா பாதிப்பு: இன்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தினமும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் மேலும் 31 பேர்களுக்கு கொரோனா வைரஸ்

தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் வெளவால்களுக்கும் கொரோனா! அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டுவித்து வரும் நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள புலி மற்றும் சிங்கங்களுக்கும் கொரோனா