21 வருடங்களுக்கு முன் இதே நாளில் நடந்த சோகம்.. நடிகை சிம்ரனின் உருக்கமான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
21 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தனது தங்கை மோனல் தன்னை விட்டு மறைந்து விட்டார் என்று உருக்கமான பதிவை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
பிரபல நடிகை சிம்ரன் தங்கை மோனல் தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார். ’’பார்வை ஒன்றே போதுமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மோனல் அதன் பின்னர் விஜய்யின் ’பத்ரி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திடீரென சென்னையில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கி மோனல் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு அவரது காதலர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது
இந்த நிலையில் தனது தங்கை மறைந்த 21 வருடங்கள் ஆனதை அடுத்து தங்கையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள சிம்ரன், ‘எனது அழகான சகோதரி மோனல் அன்பு நினைவாக.. உன்னை ஒருநாளும் என்னால் மறக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான ரசிகர்கள் சிம்ரனுக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments