21 வருடங்களுக்கு முன் இதே நாளில் நடந்த சோகம்.. நடிகை சிம்ரனின் உருக்கமான பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,April 15 2023]

21 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தனது தங்கை மோனல் தன்னை விட்டு மறைந்து விட்டார் என்று உருக்கமான பதிவை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

பிரபல நடிகை சிம்ரன் தங்கை மோனல் தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார். ’’பார்வை ஒன்றே போதுமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மோனல் அதன் பின்னர் விஜய்யின் ’பத்ரி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திடீரென சென்னையில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கி மோனல் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு அவரது காதலர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது

இந்த நிலையில் தனது தங்கை மறைந்த 21 வருடங்கள் ஆனதை அடுத்து தங்கையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள சிம்ரன், ‘எனது அழகான சகோதரி மோனல் அன்பு நினைவாக.. உன்னை ஒருநாளும் என்னால் மறக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான ரசிகர்கள் சிம்ரனுக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

More News

சில்லுன்னு ஒரு காதல்' குட்டி பெண்ணா இவர்? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

சூர்யா ஜோதிகா நடித்த 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடித்திருந்த ஸ்ரேயா சர்மா தற்போது ஒரு வழக்கறிஞராக

விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த மாஸ் தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்..!

 நடிகர் விஜய் சேதுபதி 50வது படம் என்ற மைல் கல்லை நெருங்கி இருக்கும் நிலையில் அந்த படத்தில் ஒரு புதுமை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தோனியின் தமிழ்.. அழகாகத்தான் இருக்குது..!

தல தோனி தமிழில் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தோனியின் தமிழ் பேச்சு அழகாகத்தான் இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர் 

ஆபத்தான பொசிஷன்… விபரீத ஆசையில் ஆண் உறுப்பை உடைத்துக் கொண்ட இளைஞர்!

இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பார்னருடன் உடலுறவு மேற்கொண்டபோது ஆணுறுப்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

கனவு இல்லம்: கப்பல் வீடு… அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி!

இன்றைய சூழலில் எல்லோருக்கும் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது.