close
Choose your channels

டீன் ஏஜ் சிம்ரனை பார்க்கணுமா? AI டெக்னாலஜியில் ஒரு அற்புதம்.. வைரல் புகைப்படம்..!

Thursday, August 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகை சிம்ரன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா உட்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது தெரிந்தது. அவர் பிரபல நடிகர்களின் படங்களில் நடித்தாலும், பாடலுக்கு வந்து போகும் வழக்கமான ஹீரோயினியாக இல்லாமல், அவரது கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார்.

இந்த நிலையில் சிம்ரன் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டாலும் அவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் அவர் அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் உள்பட பல்வேறு புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் AI டெக்னாலஜியால் உருவாக்கப்பட்ட சிம்ரன் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். சிம்ரனை டீன் ஏஜில் பார்த்தது போல் இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் தற்போது ’சப்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இது அவரது 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பிரசாந்துடன் ’அந்தகன்’, விக்ரமின் ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ’வணங்காமுடி’ ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment