இந்த புன்னகைக்கு விலை மதிப்பே இல்லை.. சித்தி இதானியின் க்யூட் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,June 26 2023]

நடிகர் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை சித்தி இதானி, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பள்ளிக்கு சென்று பரிசுகள் கொடுத்த வீடியோவை பகிர்ந்து இந்த குழந்தைகளின் புன்னகைக்கு விலை மதிப்பே இல்லை என்று பதிவு செய்துள்ளார்

தெலுங்கு மற்றும் குஜராத்தி படங்களில் நடித்த நடிகை சித்தி இதானி, கடந்த ஆண்டு வெளியான சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல திருப்புமுனையை கொடுத்ததை அடுத்து ’காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் இருந்தார் என்பதும் தற்போது ’நூறு கோடி வானவில்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் மும்பையில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பள்ளிக்கு சென்று பரிசுகள் வழங்கினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அதில் ’நீங்கள் ஒருவருக்கு பரிசளிப்பது மிகச் சிறந்த விஷயம். லிட்டில் ஏஞ்சல்ஸ் மனநல குன்றிய குழந்தைகளுடன் மதிய நேரத்தை செலவு செய்தேன், அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலை மதிப்பில்லாதது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த க்யூட் வீடியோவுக்கு ஏராளமான லைக் குவிந்து வருகிறது.