close
Choose your channels

வழக்கறிஞர் கேரக்டரில் ஸ்ருதி ரெட்டி.. ஹீரோ யார் தெரியுமா?

Tuesday, May 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ருதி ரெட்டி, ‘விசாரணை கைதி’ என்ற படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தில் நட்டி நடராஜ் ஹீரோவாக நடித்த வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ’மெரினா புரட்சி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ரெட்டி. இவர் தற்போது ’விசாரணை கைதி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நட்டி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருதி ரெட்டி வழக்கறிஞர் கேரக்டரில் நடத்தி வருகிறார் என்பதும் அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் சிக்கி கைதான ஒருவருக்கு வாதாடும் கேரக்டரில் இவர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்திற்காக நீதிமன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் இந்த காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாகவும் ஸ்ருதி ரெட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது உள்ளதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ்க்கு பின் ஸ்ருதி ரெட்டி தமிழ் திரை உலகில் ஒரு ரவுண்டு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment