செம எணர்ஜியுடன் லண்டனில் வைப் செய்த நடிகை ஸ்ருதிஹாசன்… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஸ்ருதிஹாசன் லண்டன் சென்றுள்ள நிலையில் புதிய எணர்ஜியுடன் இருப்பதாகக் கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
பாலிவுட் சினிமாவில் கடந்த 2008 இல் நடிகர் இமரான் கானுக்கு ஜோடியாக ‘லக்’ திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். அதைத் தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷ், விஜய், அஜித் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.
மேலும் பாலிவுட் சினிமாவிலும் கவனம் செலுத்திவரும் நிலையில் பின்னணி பாடகியாகவும் இசையமைப்பு பணிகளிலும் அவ்வபோது ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டூடில் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவை காதலித்துவரும் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது லண்டனில் தனது விடுமுறை நாட்களைக் கழித்து வருகிறார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பின்பு தனது காதலருடன் நடிகை ஸ்ருதிஹாசன் பல்வேறு இசை விழாக்களில் கலந்து கொண்டு தனது விடுமுறையை உற்சாகமாக கழித்து வருகிறார். அதிலும் டவுன்லோட் ஃபெஸ்டிவல் எனும் இசை திருவிழா குறித்து உற்சாகமாக கருத்துப் பதிவிட்ட அவர் தற்போது படு உற்சாகத்தோடு இருக்கிறேன். ஆனால் பழைய அன்போடு எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிப்பு, பின்னணி பாடகி, இசை என்று பன்முகத் திறமைகளை கொண்ட நடிகை ஸ்ருதிஹசான் குறித்த தகவல் எப்போதும் ரசிகர்களிடையே வைரலை ஏற்படுத்தும். இந்நிலையில் லண்டன் சென்றுள்ள நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது கேஜிஎஃப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சலார்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர ஆங்கில திரைப்படமான ‘தி ஐ’ திரைப்படத்திலும் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com