சைமா விருது விழாவில் தங்கையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்!

  • IndiaGlitz, [Monday,September 20 2021]

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவான சைமா 2021 விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஹைத்ராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப்பல மொழி சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள்களான நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரி டிசைன் செய்யப்பட்ட கருப்பு நிற உடையில் வலம் வந்ததோடு நிகழ்ச்சிக்கு வரும்போதே உற்சாகமாக நடந்து வந்த வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் நடிகை ஸ்ருதிஹாசன் தனது கருப்பு பேஷன் உடையில் ஒரு மெழுகு சிலையைப் போலவே காட்சி அளித்தார். மேலும் தங்கையுடன் நடிகை ஸ்ருதிஹாசன் எடுத்துக்கொண்ட ரெட் கார்ப்பெட் புகைப்படத்தையும் தன்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் தனது தங்கை அக்ஷரா ஹாசனுடன் மிகவும் நெருக்கம் காட்டக்கூடியவர். இருவரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வது, சேட்டைகள் செய்வது என எப்போதும் உற்சாகமாகவே காட்சி அளிக்கின்றனர். அந்த வகையில் சைமா விருது வழங்கும் விழாவில் அக்காவும் தங்கையும் செய்த ரகளை வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று இருக்கிறது.

தமிழ் சினிமாவில் “ஏழாம் அறிவு” திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ருதிஹாசன் பின்னர் “3”, “பூஜை”, “புலி“, “வேதாளம்“ போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதேநேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் “சலார்” எனும் திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல நடிகை அக்ஷராஹாசன் தமிழில் “விவேகம்“ மற்றும் “கடாரம் கொண்டான்” போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்து இருந்தார். இந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனும் நடிகை அக்ஷராஹாசனும் சைமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.