5 வயதில் பாலியல் தொல்லை.. இன்று அவனுக்கு பெண் குழந்தை இருக்குது: பிரபல நடிகையின் அதிர்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Monday,March 18 2024]

ஐந்து வயதில் தனது உறவினர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தற்போது அவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது என்றும் பிரபல நடிகை ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் கொடூரம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்பதும் போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், குறிப்பாக திரை உலகை சேர்ந்த பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கேரள மாநிலம் வயநாடு என்ற பகுதியைச் சேர்ந்த நடிகை சுருதி, தனக்கு ஐந்து வயதிலேயே பாலியல் தொல்லை இருந்ததாக அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கோவையில் எம்ஏ படித்து அதன் பின் மாடல் அழகியாக வலம் வந்த சுருதி, மலையாள தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானார். சமீபத்தில் வெளியான நரேன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த ’குயின் எலிசபெத்’ என்ற படத்தில் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’தனக்கு ஐந்து வயது இருக்கும் போது தன்னுடைய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்றும், அப்போது எனக்கு பயமாக இருந்ததாலும், அவர் தனது உறவினர் என்பதாலும் நான் வெளியே சொல்லவில்லை என்றும் ஆனால் என்னை போல் இல்லாமல் இப்போது உள்ள குழந்தைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்திக்கும் போது பயமின்றி பெற்றவரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த உறவினருக்கு திருமணம் ஆகி தற்போது பெண் குழந்தை உள்ளது என்றும் பெண் குழந்தை பிறந்தவுடன் என்னிடம் அவர் மன்னிப்பு கேட்டு மெசேஜ் செய்து உள்ளார் என்றும் இப்போது கூட அவரை நான் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்றும் அவருக்கு பெண் குழந்தை இருப்பதால் அவருடைய அவர் குற்ற உணர்ச்சியுடன் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

More News

நான் வருவேன்னு எதிர்பார்க்கலைல்ல... 'குக் வித் கோமாளி' சீசன் 5 மாஸ் புரமோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் வருமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்,

முதல்முறையாக தென்னிந்திய திரையுலகிற்கு வரும் கரீனா கபூர்.. யார் ஹீரோ தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் முதல் முறையாக தென் இந்திய திரைப்படத்தில் அதுவும் மாஸ் நடிகரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணக்கன்பட்டி சித்தர்: அதிசயங்கள், வாழ்க்கை வரலாறு | ஜோதிடர் ரஞ்சனாவுடன் ஆன்மீக கலந்துரையாடல்

புகழ்பெற்ற ஆன்மீக யூடியூப் சேனல் ஆன்மீக Glitz-இல் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி சித்தர் பற்றிய ஒரு அற்புதமான வீடியோவை Indiaglitz உங்களுக்கு வழங்குகிறது.

'எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன்'.. ஆர்யா வெளியிட்ட ஆச்சரிய புகைப்படங்கள்..!

நடிகர் ஆர்யா கடந்தாண்டு மார்ச் மாதம் இருந்த உடற்கட்டு புகைப்படத்தையும் இந்த ஆண்டு மார்ச் மாதம் உள்ள உடற்கட்டு புகைப்படத்தையும் வெளியிட்டு ஒரே ஆண்டில் தான் எப்படி மாறிவிட்டேன்

 5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும்.. அண்ணா பல்கலையில் சூர்யா பேச்சு..!

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் '5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும்' என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார்