கடற்கரையில் நடை பழகும் நடிகை ஸ்ரோயாவின் க்யூட் பாப்பா… மாஸ் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் சமீபத்தில் தனக்கு குழ்ந்தை பிறந்த விஷயத்தை சோஷியல் மீடியா மூலம் தெரிவித்து இருந்தார். 9 மாதத்திற்கு பிறகு குழந்தை பிறந்த தகவலை தெரிவித்த நடிகை ஸ்ரேயா தற்போது அந்தக் குழந்தை நடை பழகும் வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “சிவாஜி“ படத்தில் நடித்து பிரபலமானார். அடுத்து “கந்தசாமி“, “திருவிளையாடல்“, “அழகிய தமிழ் மகன்“ எனப் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார். அதேபோல தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவந்தார்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய விளையாட்டு வீரர் ஆண்டரேவ் கோசீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்திவந்த இவர் கொரோனா காலத்தில் தனது கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வந்தார். இதைத்தொடர்ந்து கொரோனா காலத்தில் தனக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததாக சமீபத்தில் அறிவித்த அவர் அந்தக் குழந்தைக்கு “ராதா“ எனப் பெயர் சூட்டியிருப்பதையும் தெரிவித்து இருந்தார்.
தற்போது தனது குழந்தை ராதாவுடன் நேரத்தை செலவிட்டு வரும் நடிகை ஸ்ரேயா சரண், குழந்தை ராதா கடற்கரையில் அழகிய நடை பயிலும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் பாராட்டை குவித்து வருகிறது.
தமிழில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசுரன்“ எனும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நடிகை ஸ்ரேயா, “சண்டைக்காரி“ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “RRR“ திரைப்படத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார். கூடவே தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் “கமனம்“ எனும் திரைப்படத்தில் நடிகை நித்யா மேனனுடன் இவர் இணைந்து நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout