கர்ப்பமாக இருந்த ஸ்ரேயா.. இப்போது இருக்கும் ஸ்ரேயா.. என்ன ஒரு மாற்றம்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,April 11 2023]

கடந்த 2021 ஆம் ஆண்டு கர்ப்பிணி ஆக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் நடிகை ஸ்ரேயா சரண் பதிவு செய்துள்ள நிலையில் இரண்டே வருடத்தில் என்ன ஒரு மாற்றம் என ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கோச்சீவ் என்பவரை நடிகை ஸ்ரேயா சரண் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் 2021 ஆம் ஆண்டு கர்ப்பிணியாக இருந்த போது எடுத்த புகைப்படத்தையும் அதன்பின் குழந்தை பிறந்த பின்னர் எடுத்த புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அதில் தெரியும் மிகப்பெரிய மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

40 வயதில் ஸ்ரேயா சரண் 15 வருடங்களுக்கு முன் இருந்தது போல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

More News

சோனியா அகர்வாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க..!

நடிகை சோனியா அகர்வாலின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

'டேய் நான் தாண்டா விநாயகர்': யோகிபாபுவின் 'யானை முகத்தான்' டிரைலர்..!

யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்த 'யானை முகத்தான்' என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல்

சூர்யாவுக்கு 32 நாட்கள், அருண் விஜய்க்கு 20 நாட்கள்.. பாலாவின் 'வணங்கான்' அப்டேட்..!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' என்ற திரைப்படம் உருவாகிய நிலையில் அந்த திரைப்படம் பாதியில் நின்று போனது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' நடிகைக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தால் அதிர்ச்சி..!

சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை விசாகா சிங் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

'விடுதலை' படத்தை அடுத்து ரஜினிகாந்த் பாராட்டிய இன்னொரு படம்.. படக்குழுவினர் மகிழ்ச்சி..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது மற்றொரு சூப்பர்