கர்ப்பமாக இருந்த ஸ்ரேயா.. இப்போது இருக்கும் ஸ்ரேயா.. என்ன ஒரு மாற்றம்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,April 11 2023]

கடந்த 2021 ஆம் ஆண்டு கர்ப்பிணி ஆக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் நடிகை ஸ்ரேயா சரண் பதிவு செய்துள்ள நிலையில் இரண்டே வருடத்தில் என்ன ஒரு மாற்றம் என ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கோச்சீவ் என்பவரை நடிகை ஸ்ரேயா சரண் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் 2021 ஆம் ஆண்டு கர்ப்பிணியாக இருந்த போது எடுத்த புகைப்படத்தையும் அதன்பின் குழந்தை பிறந்த பின்னர் எடுத்த புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அதில் தெரியும் மிகப்பெரிய மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

40 வயதில் ஸ்ரேயா சரண் 15 வருடங்களுக்கு முன் இருந்தது போல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.