நடிகை ஸ்ரேயா வீட்டில் விசேஷம்: ரசிகர்கள் வாழ்த்து!
- IndiaGlitz, [Thursday,November 05 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’சிவாஜி’ தளபதி விஜய்யுடன் ’அழகிய தமிழ் மகன்’ விக்ரமுடன் ’கந்தசாமி’ உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தற்போது இந்த காதல் ஜோடி ஸ்பெயின் நாட்டில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
நடிகை ஸ்ரேயா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளவர் என்றும் தனது காதல் கணவருடன் இணைந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் அவரது வீட்டில் விசேஷம் என்று தெரியவருகிறது. நம்மூரில் பெண்கள் தங்கள் கணவர்கள் நீண்ட ஆயுளோடு இருக்க வரலட்சுமி நோன்பு இருப்பது போல வட இந்தியாவில் ’கர்வா சவுத்’ என்ற விரதம் இருப்பார்கள். அந்த விரதத்தை தான் ஸ்ரேயா இருந்ததாகவும் இது குறித்த புகைப்படங்களை தான் அவர் பதிவு செய்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஸ்ரேயாவுக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
தற்போது நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் ’கமனம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
View this post on InstagramHappy karvachaut to all you beautiful people. May you all stay safe and healthy ....
A post shared by Shriya Saran (@shriya_saran1109) on Nov 4, 2020 at 9:21am PST