பணத்தை திருடிய நபர் தெரிந்தும் மனிதாபிமானமாக நடந்து கொண்ட கமல்-ரஜினி பட நடிகை..!

  • IndiaGlitz, [Friday,July 28 2023]

தன்னுடைய வீட்டில் பணம் திருடு போனதை அடுத்து அந்த திருட்டை செய்வது யார் என்பதை கண்டுபிடித்த பின்னரும் மனிதாபிமானமாக காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கமல், ரஜினி பட நடிகை கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசன் நடித்த ’எனக்குள் ஒருவன்’ ரஜினிகாந்த் நடித்த ’தளபதி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷோபனா. இவர் தனது தாயாருடன் சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டில் திடீரென பணம் காணாமல் போனதாக தெரிகிறது

இதனை அடுத்து தனது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் விஜயா மீது ஷோபனாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனை அடுத்து அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் வந்து விசாரணை செய்தபோது பணிப்பெண் விஜயா, தான் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்

ஷோபனா வீட்டில் திருடிய பணத்தை பணிப்பெண் விஜயா தனது மகள் வங்கி கணக்கிற்கு அனுப்புவதற்கு டிரைவர் இடம் தான் கொடுத்ததாகவும், டிரைவர் ஜிபே மூலம் அவரது மகளுக்கு பணம் அனுப்பி உள்ளது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து பணிப்பெண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஷோபனா கூறியதாகவும் அவர் தொடர்ந்து தனது வீட்டில் வேலை பார்க்கட்டும் திருடிய பணத்தை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்வதாகவும் கூறியதாகவும் தெரிகிறது.

More News

நயன்தாரா இஷ்டமில்லை என்று சொல்லும்போது அவரை கட்டாயப்படுத்த முடியாது: விஷால்

நடிகை நயன்தாரா ஒரு திரைப்படத்தின் புரமோஷனுக்கு வர இஷ்டமில்லை என்று கூறினால் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்று நடிகர் விஷால் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். 

'ஜெயிலர்' படத்தில் தமன்னா கேரக்டர் இதுவா? அதனால் தான் 'காவாலா' பாடலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்  இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த உலகம் உழைக்கிறவன மட்டும் தான் நம்பும்: விஜய் சேதுபதி வெளியிட்ட யோகி பாபு பட டீசர்..!

யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்த 'லக்கி மேன்' என்ற படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்

31 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்த இளையராஜா-பாரதிராஜா.. என்ன படம் தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் பல படங்களில் இணைந்து பணியாற்றிய நிலையில் கடந்த 31 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு

இது வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்.. நடிகை ரம்யா பாண்டியனின் அழகான புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த அழகிய புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.