பிரபல நடிகைக்கு ஒமைக்ரான் தொற்று… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,January 10 2022]

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் எனப்பல முன்னணி நடிகர்களுடன் நடித்து 90களில் பிரபலமான நடிகையாக இருந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாகவும் பிரபல நாட்டிய கலைஞருமாக இருந்துவரும் நடிகை ஷோபனாவிற்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதிச்செய்யப்பட்டு இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மேலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருந்தபோதிலும் தனக்கு தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறியுள்ள அவர் இந்த ஒமைக்ரானுடன் பெருந்தொற்று முடிவிற்கு வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சினிமா பிரபலங்களும் இந்தத் தொற்றில் சிக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன், விக்ரம், அர்ஜுனைத் தொடர்ந்து வடிவேலுவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. தற்போது நடிகர் சத்யராஜ், அருண்விஜய், விஷ்ணு விஷால், நடிகை மீனா, த்ரிஷா எனப் பலருக்கும் கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அந்த வரிசையில் பிரபல நாட்டியக் கலைஞரும் தென்னிந்திய சினிமா பிரபலமுமான நடிகை ஷோபானா தற்போது இணைந்துள்ளார். அவருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.