நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடி கைது: காரணம் இதுதான்

  • IndiaGlitz, [Tuesday,July 20 2021]

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் நேற்று இரவு திடீரென மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் ராஜ்குந்த்ரா குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜ்குந்த்ரா மும்பையில் நேற்று இரவு திடீரென கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே உமேஷ் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மும்பையில் ஆபாச படங்கள் தயாரித்து பிரிட்டனிலுள்ள செல்போன் செயலி நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அந்த ஆபாச படங்கள் சந்தா வாங்கும் செயலியில் பதிவு செய்யப்பட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளதாக தெரிகிறது

நடிகை ஷில்பா செட்டி, விஜய் நடித்த ’குஷி’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பதும் பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அதிமுக மதுசூதனன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி...!

அதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் அவர்கள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றது.

ஆல்கஹால் இல்லாத பீர் வகைகள் உடலுக்கு நல்லதா? அதன் நன்மைகள் என்ன?

மது என்றாலே உடலுக்கு கெடுதி என்றுதான் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஆல்கஹால்

பெட்ரோல்-டீசல் விலை சரியும்… உற்பத்தி குறித்து வெளியான அதிரடி தகவல்!

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 2 மில்லியன் பேரல்கள் அளவில் உயர்த்த ஒபேக் நாடுகள் முடிவெடுத்து உள்ளன.

3000 முத்தங்களுடன் ஸ்டாலின் புகைப்படம்.....! பாராட்டும் நெட்டிசன்கள்....!

முத்தங்களால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புகைப்படத்தை வரைந்த மாணவருக்கு, இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பதும் கடந்த 1999ஆம் ஆண்டு 'உங்கள் தீர்ப்பு' என்ற நிகழ்ச்சியின்