சிங்களா இருக்கிறது செம Bore? திருமணம் குறித்து ஓப்பனா பேசிய பிக்பாஸ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று, தற்போது ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் நடிகை ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ள நேர்காணல் கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் நடித்து முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர் நடிகை ஷெரின். தொடர்ந்து ‘ஸ்டூடண்ஸ் நெம்பர் ஒன்’, ‘விசில்’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் ‘விசில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இவரது ‘அழகிய அசுரா‘ பாடலைப் பார்த்த ரசிகர்கள் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று ஆருடம் கூறி வந்தனர்.
ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று 3 மொழிகளிலும் நடித்துவந்த அவர் குறைந்த நாட்களிலேயே சினிமாவைவிட்டு விலகினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பிக்பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதும் அப்போது சக போட்டியாளர் தர்ஷனை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டதும் ரசிகர்கள் அறிந்ததுதான். மேலும் ‘குக்வித் கோமாளி 4’ நிகழ்ச்சியிலும் நடிகை ஷெரின் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பாராட்டை குவித்திருந்தார்.
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை ஷெரின் ஒருவரை 8 வருடமாகக் காதலித்துவந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் தற்போது 4 வருட இடைவெளிக்குப் பிறகு சிங்கிளாக இருக்கிறது சலிப்பை தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். அப்படியொரு கனவு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனது சினிமா அனுபவம் குறித்து பேசியுள்ள அவர் 2008 இல் டிஜே நிகழ்ச்சியில் ஆங்கராக கலந்து கொண்டேன். இதனால் டிஜே- செய்வது குறித்து கற்றுக்கொண்டேன். இதனால்தான் என்னுடைய இன்ஸ்டா வீடியோவை நானே மேக்கிங் செய்துகொள்ள முடிகிறது. எனக்கு தெரியாத ஒன்று மேக்அப் போட்டுக்கொள்வது.
மேலும் சினிமாவில் இருக்கும்போது ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இப்போ சோஷியல் மீடியா ரசிகர்கள்தான். என்னுடைய வாழ்க்கையில் நான் எதையுமே பிளான் பண்ணி செய்வது கிடையாது. பிடித்த விஷயங்களைச் செய்கிறேன். இதனால் சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகை ஷெரின் திருமணம் ஆசை குறித்துப் பேசியுள்ள கருத்துகளுக்கு வாழ்த்துகளை கூறும் ரசிகர்கள் எப்போதும் திருமணம் என்று ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout