குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை
Send us your feedback to audioarticles@vaarta.com
குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகை ஒருவர் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் வினய் ஹீரோவாக நடித்த ’மிரட்டல்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் ஷர்மிளா மந்த்ரா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது என்பதும் அதில் நடிகை ஷர்மிளா மந்திரா படுகாயமடைந்து சிகிச்சை செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் விபத்தை அடுத்து தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் மட்டுமன்றி அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நடிகை ஷர்மிளா மந்த்ரா கூறும்போது நானும் எனது குடும்பத்தாரும் கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து பரிசோதனை செய்து கொண்டோம். அதில் எங்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Hi everybody ,
— Sharmiela Mandre (@sharmilamandre) September 3, 2020
Me and a few of my family members have been tested positive for COVID-19 with mild symptoms and hence chosen to be in home isolation . I have quarantined myself and going through the prescribed treatment as per my doctor’s advice . ??
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com